இரண்டாம் காதல் போர் என் காதலை எப்படி சொல்வேன்..?...
இரண்டாம் காதல் போர்
என் காதலை எப்படி சொல்வேன்..?
முதல் முறை என்றால் வெட்கத்தோடு சொல்லிடுவேன்..
இரண்டாம் முறை என்பதால் தயக்கத்தோடு சொல்கிறேன்...
இருண்ட உன் வாழ்வில் இரண்டாம் ஒளியாக நான் வந்தால் ஏற்பாயா..?
உன் திருமண வாழ்வில் தோற்று போனாய் என வருந்தாதே..
வெற்றி இடம் சொல்லாதே நான் வெற்று இடம் இனி என்னிடம் வராதே என்று...
உன் மீது பற்றோடு நான் ஒருத்தி இருக்கிறேன்..
சற்று என்னையும் எண்ணி பார் இன்று...
உன் தாரமாக வந்தால் பாரமாக மாட்டேன்...
தூரமாகி போகாதே..!
என் விழி ஈரமாகி போகுதடா..
வெயில் படும் திசையில் உன் நிழலாவேன்...
குயில் பாடும் இசையில் உன் குழலாவேன்...
கண்ணீராய் நிறைந்த உன் விழியில் இனி..
கானல்நீராய் மறையும் உன் வலி.. என் வழியில்..
என் காதலை எப்படி உனக்கு சொல்வேன்... ?
சித்தியாக சீற மாட்டேன்..
கத்தியாக கீற மாட்டேன்..
சக்தியாக மாறுவேன் உங்களை காக்க...
தாயாராக வர தயாராக உள்ளேன்... உன் பிள்ளைக்கு மட்டுமல்ல உனக்கும்...