எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரண்டாம் காதல் போர்

 என் காதலை எப்படி சொல்வேன்..?


 முதல் முறை என்றால் வெட்கத்தோடு சொல்லிடுவேன்..
 
 இரண்டாம் முறை என்பதால் தயக்கத்தோடு சொல்கிறேன்...
 
இருண்ட உன் வாழ்வில்  இரண்டாம் ஒளியாக நான் வந்தால் ஏற்பாயா..?

 உன் திருமண வாழ்வில் தோற்று போனாய் என வருந்தாதே..

வெற்றி இடம் சொல்லாதே நான் வெற்று இடம் இனி என்னிடம் வராதே என்று...
உன் மீது பற்றோடு நான் ஒருத்தி இருக்கிறேன்..
சற்று என்னையும் எண்ணி பார் இன்று...

உன் தாரமாக வந்தால் பாரமாக மாட்டேன்...
தூரமாகி போகாதே..!
என் விழி ஈரமாகி போகுதடா..

 வெயில் படும் திசையில் உன் நிழலாவேன்...
குயில் பாடும் இசையில் உன் குழலாவேன்...

கண்ணீராய் நிறைந்த உன் விழியில் இனி..
கானல்நீராய் மறையும் உன் வலி.. என் வழியில்..

என் காதலை எப்படி உனக்கு சொல்வேன்... ?

சித்தியாக சீற மாட்டேன்..
கத்தியாக கீற மாட்டேன்..
சக்தியாக மாறுவேன் உங்களை காக்க...

தாயாராக வர தயாராக உள்ளேன்... உன் பிள்ளைக்கு மட்டுமல்ல உனக்கும்...

மேலும்

கனவு தேசத்தின்

  கண்ணீர் பூக்கள்
                           

              என் காதல்

மேலும்

எனக்காக பிறந்தவள்
                        நீ!!
      உன்னை இன்றி
      யாரை  தேடும் 
             என்  இதயம்!!

மேலும்

நீ போகும் சாலையின் ஓரத்தில் மணலாக நான் இருப்பேன்... 
உன் காலை வேளையில் கனவாக நான் இருப்பேன்... 
உன் மாலை வேளையில் உன்னுள்ளே மறைந்திடுவேன்... 
காலம் முழுவதும் உன் கதையினிலே நான் கலந்திருப்பேன்... 
நீ சாகும் போது உன் சமாதி உள்ளே நான் சாய்ந்திருப்பேன்.... 

மேலும்

அவள் வருகையை எதிர்பார்த்து கண்கள் துடித்தது 
         ஆனால் கலங்கவில்லை என்றோ ஒரு நாள் பார்க்கும் அவள் நினைவில் என் கண்ணீர் நிறைந்த கண்கள் அவள் மனதில் பதிய கூடாது என்று 
   அவள் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த கலங்காத என் கண்கள் 

மேலும்

உன்னோடு 
பேச நினைப்பதெல்லாம் 
காற்றோடு பேசி 
தீர்க்கிறேன்

என்றாவது
ஒரு நாள் 
அக்காற்றை நீ 
சுவாசிக்கும் போது 
என் அன்பை 
புரிந்துகொள்வாய் 
என்ற நம்பிக்கையில்...!!!

கிருஷ்

மேலும்

உன் அழகில் மடி சாய்ந்து 
உன் கண்ணக் குழியில் 
முத்தங்கள் பரிமாறி 
உன் மார்பில் முகம் புதைத்து 
காலம் முழுவதும் 
உன் அருகில் வாழும் 
வரம் வேண்டும் அன்பே...


கிருஷ் ...

மேலும்

உன் அழகில் மடி சாய்ந்து 
உன் கண்ணக் குழியில் 
முத்தங்கள் பரிமாறி 
உன் மார்பில் முகம் புதைத்து 
காலம் முழுவதும் 
உன் அருகில் வாழும் 
வரம் வேண்டும் அன்பே...


கிருஷ்ணா

மேலும்

அன்பெனும் நார் கொண்டு
ஆசையெனும் பூவெடுத்து
நான் தொடுத்த காதல் மாலையை
மங்கையவள் மனிக்கழுத்தில்
மாட்டும் மணித் துளிக்காக
மன்னவன் நான் காத்திருக்க
முழுமதி முகத்தோடு கண்முன்னே
வந்து நின்றாள் என் உயிருக்கு
மூச்சான அவள்...

                                                           இவண்
                                                       மணி துரை.

மேலும்

தனிமையில் இருக்க ஆசை - கல்லறையில்.

    சுவாசம்...சுடலை

மேலும்

மேலும்...
மேலே