எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தூங்கவிடாமல் துவளச்செய்தவள் தூக்கத்திலிருந்தவனுக்கு உடல் தூக்கி போட்டது திடுக்கிட்டு...

தூங்கவிடாமல் துவளச்செய்தவள்
தூக்கத்திலிருந்தவனுக்கு உடல் தூக்கி போட்டது திடுக்கிட்டு எழுந்தேன் மின்காற்றாடியின் வேகம் போதவில்லையா உடலில் உக்கிரம் அதிகரித்ததா புரியவில்லை உடலெங்கும் முத்துமுத்தாய் வியர்வை திடீர் பீதி இதயத்துடிப்பு நொடிக்கு இரண்டாய் அதிகரித்து மூன்றென்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. மின் விளக்குகளை அனைக்காமல் தூங்கிப் போயிருந்தேன் கடிகாரத்தை நோட்டமிட்டேன்
யாமசாமம் முடிந்து வைகறையில் மணி மூன்றை தொட்டுவிட்டிருந்தது தலைப்பொட்டில் நரம்புகள் விம்மித் துடித்து வெளிவர துடித்துக் கொண்டிருந்தது இரு விரல்களால் அழுத்தம் கொடுத்து ஆசுவாசப் படுத்திக்கொள்ள முயன்றும் தோற்றுப்போய் ஆழ்மனதில் இறங்கி தேடத் துவங்கினேன் அவள்தான் ஆம் அவளேதான் அவளைப் பற்றிய ஏதோவொரு கனவைக்கண்டு அதை நினைப்பிக்க முயன்றும் முடியாமல் போய் நரம்பு மண்டலம் விம்மித் துடித்துக் கொண்டிருந்தது.
மனத்திற்க்கு மூளை தவறிழைத்து விட்டதோ ஒரு நிலையாய் எடுத்த முடிவிதுவே ஏன் இப்படி படுத்துகிறது அன்று முதலாளியிடம் கூட இவ்வளவிற்கு என்னை இழக்கவில்லையே என்னையும் என்னவனையும் (மனம்) ஏன்?. கட்டுப்படுத்தமுடியவில்லை கட்டிவைத்த கைங்கர்யம் கட்டவிழ்க்கப்பட்டது எப்படி எங்கே ஏன் எதற்காகவெனவெண்ணி உடலெங்கும் உஷ்ணம் பரவி காதிரண்டிலும் புகை கிளம்பிற்று
என்னுள் எழுந்த கேள்விகளனைத்தும் இதற்க்கு மேலும் விட்டால் உயிரைக்கூடக் குடிக்குமென நினைத்து நன்னீரில் உடலைக் குளிர்ப்பித்தேன் மணி நான்கை தாண்டி ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. என்ன செய்வதாய் உத்தேசம் மணி ஐந்தும் ஆகிவிட்டது நொடிக்கு நூறு வினாக்கள் தோன்றினாலும் மணிக்கு ஒன்றாய் பதிலளித்திருந்தால் கூட இரண்டுக்கு பதில் கிடைத்திருக்கும் இயலவில்லை ஆற்றாமையினால் அவதியுறுகிறேன்
-குளித்தலை குமாரராஜா

நாள் : 24-Apr-19, 12:42 am

மேலே