கூகிளா அய்யயோ
கூகிளா ? அய்யய்யோ !!!!
*******************************************************
சின்னஞ்சிறு வயதினரே கூகிளைத் திறக்காதீர்
நன்னெறிக் கோட்பாட்டு விசயங்கள் இருந்தாலும்
மன்னிக்க முடியாத ஆபாசம் வெகுநிறைவே
தன்னந்தனியாய் இருக்க நோக்காதீர் அதைத் திறந்தே
கொஞ்சிடும் அத்தையாம் விஞ்சிடும் காமத்தில்
எஞ்சிய பொழுதுக்கு கெஞ்சிடும் சித்தியாம்
மஞ்சமிட மருமகனை தஞ்சமடை மாமியாராம்
பஞ்சணைப் பாடலுக்கு பரிதவிக்கும் அக்காவாம்
துஞ்சாது காத்திருந்து துச்சமென நெறி ஒதுக்கி
நஞ் சொத்த செயலுக்கு அச்சாரம்தனைப் போட்டு
அஞ்சாது அது நிகழ்த்த நெஞ்சமதை கல்லாகக
பிஞ்சுச் சிறுவரினம் மிஞ்சாது அவரிடத்தே
நெறியற்ற உறவுகள் தறிகெட்ட உணர்ச்சிகள்
முறையிலா வழிதன்னில் காமத்தின் காவலர்கள்
குறையிலா கறை ஏற்று கரைகாணும் தோணிகள்
நரைகண்டு நின்றாலும் நிறைகாணா மெய்யர்கள்
கதைத்திடும் பலவரிகள் பலான மொழிதன்னில்
சதைத் திறன் நல்காட்டி ஈர்த்திடும் சித்திரங்கள்
அதைத்திற அதைத்திற என்றீர்க்கும் ஆர்வங்கள்
பதைத்திடும் பெரியோர்கள் வெம்பிடும் பிஞ்சினங்கள் ! ! !
( ஆதலால் )
" சின்னஞ்சிறு பிஞ்சுகளே கூகிளைத் திறக்காதீர் "
" தன்னந்தனியாய் இருக்க நோக்காதீர் அதைத்திறந்தே "
( இது சமுதாய விழிப்புனர்வுக்காய் )