வெட்கியே பூத்தனளே

கண்களில் மின்னல் காந்தமாய்க் கவரக்
***காதலில் விழுந்துவிட்டான் !
பெண்ணவள் அழகில் சொக்கியே அவனும்
***பித்தனாய் மாறிவிட்டான் !
எண்ணிலாப் பாக்கள் இனிமையாய் வடித்து
***எண்ணமும் சொல்லிவிட்டான் !
வெண்மதி முகத்தாள் மெல்லிடை துவள
***வெட்கியே பூத்தனளே !
( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )