அழகான நாட்கள்
காலம் கூட
கவிதை எழுதுகிறது !!! -
உன்னை என்னில் கண்ட
முதல் நொடி !!!
உன்னைக் கண்ட
முதல் கணம்;
மீண்டும் தர
மறுக்கும் காலம்;
மீட்கும் முயற்சியில்
நான்...
விரும்பியே தொலைகிறேன்
உன்னில்...
விரைவில் மீட்டுவிடு உன்
மனதில் !!!
வேண்டுமென்றே விழுந்தேன்
நீ வேண்டுமென்றே!!!
இதயத்தில் வழியவிடு காதலை...
இதழ்கள் வியர்த்தோடும் வரை!!!...
இதயம் பேச இணையும் போது
இதழ்கள் வழி மூடி விடுவதால்
வழி விடுகின்றன விழிகள்!!!
"நொடி"க்கு நொடியில்
அர்த்தம் அமைத்தன...
நொடிக்கு நொடி
இமைக்கும் உன்
இமைகள்!!!
நொடி முள்ளும்
மனம் உடைந்தது...
கடிகாரத்தில்
தைக்காமலே!!!
- பா.வெ.