காதல் குறுங்கவிதை தொடர் -08 -முஹம்மத் ஸர்பான்

உன் கண்ணுக்குள்
என்னை புதைத்துக்
கொண்டாய்.
நெஞ்சுக்குள் இடி மின்னல்
நினைவுகள் கரைகின்றது;
கனவுகள் வாழ்கின்றது.
பேச ஆயிரம்
வார்த்தைகள் உண்டு.
இதழுக்கு பிடிக்காத பேச்சு
எம் விழிகளுக்கு பிடித்து விட்டது.
நீ உண்ணும் பாத்திரத்தில்
நானும் உண்ண வேண்டும்.
அப்போதாவது உன் விரலை
நான் தொட்டுக் கொள்வேன்.