சங்கீதா வ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சங்கீதா வ |
இடம் | : அரக்கோணம், வேலூர் மாவட்டம |
பிறந்த தேதி | : 10-Apr-1981 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 352 |
புள்ளி | : 69 |
இந்த சமூகம் வாழ்வியல் முறை, சக மனிதர்கள் மீதான வெறுப்பை வெளியில் காட்ட முடியாமல் இங்கு என் மன குமுறலை கொட்ட வந்தவள்,
நேற்று
வீடுகளுக்குள் புகுந்து
பாலங்களை உடைத்து
சாலைகளை தகர்த்து
வாகனங்களை கவிழ்த்து
உயிர்களை குடித்து
ஊரையே வெள்ளக்காடாய்
மாற்றிய மழை நீர்
இன்று
அளவாக ஆர்பாட்டமில்லாமல்
அச்சமூட்டாமல்
அழகாக அமைதியாய்
அதன் கரைக்குள் பயணித்து
அதன் இறுதி போய் சேர்கிறது
ஏற்ப்பட்டது வெள்ளப்பெருக்கம் அல்ல
ஆற்றின் சுருக்கம்!
ஏரியின் முடக்கம்!
குளங்களின் அடக்கம்!
கால்வாய்களின் குறுக்கம்!
இனியாவது
ஆறுகளை அகலப்படுத்துங்கள் !
ஏரிகளை தூர்வாருங்கள் !
குளங்களை ஆழமாக்குங்கள் !
கால்வாய்களை சுத்தமாக்குங்கள்!
அவற்றின் இடங்களை ஆக்ரமித்தால்
உங்கள் இடங்களில் அவை குடிகொள்ளும்
பொன்னில்லை கையில்
பொருளில்லை
மண் திண்ணும் இந்த
பெண்ணுடலை
காப்பதிங்கே பெரும்பாடு
ஆணொருவன் துணையிருந்தால்
அடுத்தவன் தொல்லை சற்றே குறையும்
கேட்பாரற்று தனித்திருந்தால்
கேவலம்தான் அவளின் நிலை
பார்வையெல்லாம் முள் கிரீடம்
பேச்செல்லாம் குத்தூசி
ஆண்கள் பேச்சு அருவருப்பு
பெண்கள் பேச்சு அவதூறு
உயிரோடு பிணமாகும்
உள்ளமது தினம்தினமும்
ஏனிந்த உயிரெனக்கு
என்றெண்ணி தினம்சாகும்
பெண் ஜென்மம் பெருந்துன்பமே !
காற்று குமிழி காற்று
பட்டே உடைந்து போகும்
நானும் நானாலே உடைந்து போகிறேன்
நான் என்பது நானில்லை
என் உணர்வுகள்
உளி கொண்டு செதுக்க
பாறை கூட சிலையாகும்
உன் வார்த்தை உளி கொண்டு செதுக்க
நான் சிலையாகவில்லை
சிதைந்து போகிறேன்
சில்லு சில்லாய் உடைத்த மனதை
மீண்டும் ஒன்று சேர்க்கிறாய்
நான் களிமண்ணாய் இருப்பதினால்
கண்ணாடியாய் நொருங்கிவிட்டால்
கையில் அள்ள முடியாது
என்னை புரிந்துகொள்ளவில்லை - நான்
உன்னை புரிந்துகொள்ளவில்லை - நீ
நாமிருவர் நமை புரியாமல், புரிந்து கொள்ள
ஆசைப்பட்டு பிரிந்து நிற்கிறோம்
பிரிய மனமில்லாமல் !
வேண்டாமே இந்த இடி இறக்கும் வார்த்தைகள்
உச்சியில் முகர்ந்து
உதிர்த்த முத்தம்
ஈரம் காயவில்லை இன்னும் !
நெஞ்சோடு வாரி
சேர்த்த அணைப்பு
வெப்பம் ஆறவில்லை இன்னும் !
இமைக்காமல் இருவிழியில்
நாமிருவர் நமைக்கண்ட
பிம்பம் விலகவில்லை இன்னும் !
நீயின்றி நானில்லை
உயிர் கசியும் காதுகளில்
ஒலி அடங்கவில்லை இன்னும் !
நெஞ்சில் ஈரம் வற்றி போனதா ?
மனதில் வெப்பம் கொதித்து விட்டதா ?
விழியில் பிம்பம் மறைந்து போனதா ?
காதில் என் குரல் கேட்கவில்லையா ?
அடுக்கடுக்காய் வார்த்தைகள் அள்ளி வீசுகிறாய் !
உயிர் உருகி கண்ணீர் மழை பொழிந்தாலும்
உருகாதோ உன் மனம் ?
வெந்து சாகிறேன் தினம் தினம் !
கூகிளா ? அய்யய்யோ !!!!
*******************************************************
சின்னஞ்சிறு வயதினரே கூகிளைத் திறக்காதீர்
நன்னெறிக் கோட்பாட்டு விசயங்கள் இருந்தாலும்
மன்னிக்க முடியாத ஆபாசம் வெகுநிறைவே
தன்னந்தனியாய் இருக்க நோக்காதீர் அதைத் திறந்தே
கொஞ்சிடும் அத்தையாம் விஞ்சிடும் காமத்தில்
எஞ்சிய பொழுத
இழப்பதற்கு ஒன்றுமில்லை
ஏற்பதற்கும் ஒன்றுமில்லை
இறப்பை தவிர!
இடையே இருப்பதற்கு இத்தனை
இடைஞ்சல்கள்!
இருக்கும் வரை இரக்கத்தோடு இருங்கள்!
சில இதயங்கள் இன்புறட்டும்!
உறவுகள் ஒரு பக்கம்
மணமக்கள் மறுபக்கம்
அழகு ஆடம்பரம் பார்த்து
ஆளுக்கொன்றாய் தேர்வு செய்து
கடவுளின் திருஉருவம் அவரவர் வண்ண புகைப்படம் அச்சிட்டு
தாய்மாமன் பங்காளி பெண்ணுக்குரியோர் பிள்ளைக்குரியோர் தனது பெயர் இல்லை என தகராறு செய்து
ஒரு வழியாய் அச்சிட்டு
கடவுளுக்கு முதல் அழைப்பு - உற்றார்
உறவினர்கெல்லாம் இரண்டாம் அழைப்பு.
இத்தனை ஆர்ப்பாட்டம் முடிந்து அவரவர் கைகளில் உன்னை சேர்த்தோம்.
ஆழகாக திருமணம் முடிந்தது
அலைந்து திரிந்து தேர்ந்தெடுத்த நீயோ மறுநாள் குப்பை தொட்டியில்.!
கோடி விண்மீன் பறித்து வந்து
வான வெளியெங்கும் ஆயிரம் கவிதை எழுதினேன் உனக்காக !
நீ ஆகாயம் ஏறி விண்மீன் பறிக்க வேண்டாம்.
ஆயிரம் கவிதை எழுதவும் வேண்டாம்.
உன் உதட்டின் எச்சில் கொண்டு என் இதழில் முத்தம் எனும்
ஒற்றை கவிதை எழுது போதும்!
ஆயிரம் அல்ல கோடி கவிதை தொடுப்பேன் உனக்காக!