வேதனைத்தீ
உச்சியில் முகர்ந்து
உதிர்த்த முத்தம்
ஈரம் காயவில்லை இன்னும் !
நெஞ்சோடு வாரி
சேர்த்த அணைப்பு
வெப்பம் ஆறவில்லை இன்னும் !
இமைக்காமல் இருவிழியில்
நாமிருவர் நமைக்கண்ட
பிம்பம் விலகவில்லை இன்னும் !
நீயின்றி நானில்லை
உயிர் கசியும் காதுகளில்
ஒலி அடங்கவில்லை இன்னும் !
நெஞ்சில் ஈரம் வற்றி போனதா ?
மனதில் வெப்பம் கொதித்து விட்டதா ?
விழியில் பிம்பம் மறைந்து போனதா ?
காதில் என் குரல் கேட்கவில்லையா ?
அடுக்கடுக்காய் வார்த்தைகள் அள்ளி வீசுகிறாய் !
உயிர் உருகி கண்ணீர் மழை பொழிந்தாலும்
உருகாதோ உன் மனம் ?
வெந்து சாகிறேன் தினம் தினம் !