வரந்தரும் விநாயகா

பல்லவி
`````````````
மங்களம் பொங்கிட வரந்தரும் விநாயகா
எங்களுக் கருளவே இக்கணம் வருகவே !

அனுபல்லவி
~~~~~~~~~~~~
திங்களும் கங்கையும் சிரசினில் சூடிய
சங்கரன் மைந்தனே சண்முகன் சோதரா !

சரணம்
````````````
மோதகப் பிரியனே மூஷிக வாகனா
பாதமும் பணிந்திட பரிவுடன் காத்திடு
சோதனை போதுமெம் சுமைகளைத் தாங்கிடு
வேதனை நீக்கிடு விக்கின விநாயகா !


( விளச்சீர்களால் அமைந்த பாடல் )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (6-Nov-15, 12:24 am)
பார்வை : 70

மேலே