ரோமியோவின் கட்டில் பூக்கள்

ரோமியோவின் கட்டில் பூக்கள்
=============================

நிமிடம் நூறு முத்தங்கள் பூக்கின்றன
அதற்கு பின்னால்
கவிதை கேட்கும் காதலியின்
ஒரு முத்தத்தின் கிறக்கமும்
கச்சை அகற்றிய மேனியும்
என் ஒப்பனைகளுக்கு போதுமாயிருக்கிறது

இழுபறிதான்
பெரிய கட்டிலில் நான்கு முனை
நான்கு கால்களால்
வாழலாம் வா
நாய்க் காதலா எனாதே
நம் கட்டிலின் சர்ச்சைகள் எல்லோராலும்
பேசப்படும்வரைதான்
நீ எனக்கானவள் என்பதை
உலகம் நம்பும்

என்றாவது நாம் பிரிந்துசெல்லக்கூடும்
முன்னாலேயே
உன்னை என்னோடு வைத்து
ஊர் பேசிவிடட்டும்
இந்த கட்டத்தின் காதலர்களின் வரிசையில்
உன் பெயரும் என் பெயரும்
நாம் ஒன்று சேராமலேயே சரிதையாகிவிடட்டும்

ஒன்றோடொன்று உரசாத
நம் உள்ளங்கைகள் பட்டுத்தானே
மழைத்துளிகள் இங்கே தவறிவிழுந்தன
அடையாளமாக்கிக்கொள்
அப்பொழுது இதுதான்
நாம் ஸ்பரிசித்துக்கொண்டதற்கான
சாட்சி என்று

விடியும் முன்னால் உன் ஜன்னலின் வழியே
மலர் த்தூது விடுக்கிறேன்
விழித்துக்கொள்ள மாட்டாய்
நீ பார்க்காதவரை
உன் கட்டிலை சுற்றியெங்கும்
என் ஈரல் முளைத்த
காட்டு மலர்கள்தான் அலங்கரிக்கின்றன
இருளைக்கிழித்த கடல் விளிம்பு
உன்னோடு என்னையும்
இப்படித்தான் அம்பலம் செய்துக்கொண்டிருக்கும்

என்னிலிருக்கும் எதையும் நீ
ஏற்காதவரை
என் உப்பரிகை மாடத்து
எல்லா பூக்களும்
உனக்கு தட்டுப்படுவதாயில்லை

காலம் உன்னை
நான் தூவிய மலர்களோடு
அந்த கட்டிலில் சேர்த்தால் சேர்வோம்,,

விதிகளின் கட்டுப்பாட்டில்
இன்னொரு வாழ்க்கை என்றாகிவிட்டால்
வாழ்ந்துவிடு யாரோவுடன்
அப்பொழுதும் உனக்கான பூக்கள்
பூத்துக்கொண்டேதான் இருக்கும் ம்ம்ம்,,,

என்னால் வளர்க்கப்பட்ட
எந்த பூக்களுக்கும் வயதாகிடவில்லை
இன்னமும்ம்ம்,
நிரப்பிக்கொண்டுதான் இருக்கின்றன,,,
உன் அறையில்
நீ இல்லாத குறைகளை,,

கைப்பிடித்தற்காக கர்வம் கொண்டிருப்பான்
உனை கட்டியவனிடம் சொல்
காலங்கள் கடந்தும் மணம் பரப்பி
சருகுகள் ஆகிவிட்டவைகளைத்தாண்டி
அவன் தூது விடுத்த
சமீப கால மலர்ச்சரங்களை
அவன் கல்லறைக்கென்று சேமிக்கிறேன் என

ஆம்,,,அந்த அறையுள்
என்னால் எறியப்பட்ட
அத்தனை பூக்களின் வாசமும்
இனி அங்கேயேதான் கிடக்கப்போகிறது
அவை சருகுகளாகிவிட்டதை தாண்டியும்,,,

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (6-Nov-15, 5:20 am)
பார்வை : 169

மேலே