ரகசிய ஸ்நேகிதியே

பூவுக்குள் தேனாய் புதைந்துவிட்ட காதல்
மொட்டவிழ்க்கும் வரை மறைந்திருக்கும்
கனவுகள் பற்பல பேசி சிரித்து மகிழ்ந்தாலும்
தனிமையின் தழும்புகளில் தவித்திருந்தேன்
நீலப்பட்டாடை உடுத்திய தேவதை கண்டு
காலம் கூட கல்லாய் திகைத்து நிற்கும்
கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு
கைகள் இரண்டும் எங்கெங்கோ வருடும்
தேன்கனியவள் மாங்கனிகள் இரண்டும்
திகட்டாத மதுரமாக நாவினிலே தவழும்
இடையில் என் விரல்கள் மிருதங்கம் வாசிக்க
அவள் நாவோ நாதஸ்வர ஒலிகள் எழுப்பும்
கூடி மகிழ்ந்து குதூகலிக்க நினைத்தாலும்
கூடாது என்று காலம் தடை போடும்
பூட்டிவைப்பதால் காதல் புதைந்து விடாது
திறந்து காட்டும்போது புதையலாய் மின்னும்

எழுதியவர் : நிழல்தாசன் (18-May-24, 12:08 pm)
சேர்த்தது : நிழல்தாசன்
பார்வை : 111

மேலே