சிவனே போற்றி

உண்ணாமல் உறங்காமல்
ஊர் எல்லாம் சுற்றாமல்
தின்னாமல் திகட்டாமல்
திங்கள் பல கடந்தாலும்

பின்னாமல் சடை முடிகள்
பிடரி வரை வளர்ந்தாலும்
பின் தொடர்ந்து வருவேன் - என்
மனக்கண்ணில் சிவனே உனை

ஆடாமல் அசையாமல்
அடி எடுத்தும் வைக்காமல்
தேடாமல் வாடாமல்
தென் பொதிகை மலையினிலே

நாடாமல் நந்தி பக
வான னிடம் கூறாமல்
என் கண்ணிலே நிறுத்தி
தவம் செய்வேன் சிவனே உனை

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (19-May-24, 6:41 am)
சேர்த்தது : Kannan selvaraj
Tanglish : sivane potri
பார்வை : 59

சிறந்த கவிதைகள்

மேலே