நிழல்தாசன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நிழல்தாசன் |
இடம் | : மட்டக்களப்பு |
பிறந்த தேதி | : 30-Oct-2003 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Aug-2018 |
பார்த்தவர்கள் | : 222 |
புள்ளி | : 41 |
பித்து பிடித்து காதல் தலைலைக்கேறி
பிதற்றுகிறேன் உன் பெயரை சொல்லி
உனைப்பிரிந்த ஒவ்வொரு கணமும்
உழலுகிறேன் பூமி நரகமாக தெரிய
மூச்சுக்காற்றில் உன் தலை முடி வாசம்
நாடி துடிப்பிலும் உன் நாமம் ஒலித்தது
சிதறிய சலங்கை மணி போல் உன் சிரிப்பு
கோபத்தில் சுருங்கும் மூக்கின் முறைப்பு
மணிக்கணக்காய் கதைகள் பேசி உந்தன்
மடிதவழ் குழந்தையாய் வாழ வேண்டும்
கரும்பாய் இனிக்கும் கருவிழிகள் நினைந்து
கருமுகிலாய் கண்கள் கண்ணீர் வடிக்கும்
நினைவலைகளில் நிழலாய் நீ நடக்க
காலில் மிதிபட்ட பூச்சியாய் கசங்குகிறேன்
கட்டிலிலே படுத்து கதறுகிறேன் பெண்ணே
கட்டியணைத்தொரு முத்தம் தருவாயா
சிறகொடிந்த பறவையாக சிறுமைப்பட்ட மக்கள்
சிறுத்தைகளை கிளர்ந்தெழ சிங்கங்கள் மிரண்டன
உரிமைக்குரல்கள் ஊமைக்குரலாக்கப்பட்ட பின்
உறவுகளை நினைய கூடாதாம் உத்தரவு போடுகின்றனர்
கூடுகட்டி கூப்பாடு போட்டு கூத்தடித்து களிப்போர்
கஞ்சி கொடுக்கவும் விடாது வஞ்சிப்பது ஏனோ
பதினைந்து ஆண்டுகள் பறந்திட்ட பின்னனும் நெஞ்சில்
பதிந்திட்ட காயங்கள் இன்னும் ஆறாத வடுவாய்
அருகிலே இருந்தாள் வெள்ளை உடுத்திய தேவதை
கருவிழிகள் கண்டதும் கன்னத்திலே ஒரு சிரிப்பு
பஞ்சு மிட்டாய் கன்னம் பட்டு நாராய் கூந்தல்
பார்த்தவுடன் நெஞ்சில் பட்டாம்பூச்சி படபடக்கும்
கன்னத்தில் முத்தமிட்டு கொஞ்சி பேசிடவில்லை
கொஞ்சம் பேசினாலும் நெஞ்சிலே நிறைந்தாள்
கூந்தலை எடுத்து அவள் காதின் பின்னால் விட்டு
கூச்சத்தில் அவள் நெளிவதை பார்க்க தோன்றியது
வாயோடு வாய் வைத்து பேச வேண்டிய மொழியை
வார்தைகளாலாவது கூட பேசி மகிழ முடியவில்லை
கண்களில் மட்டும் காதல் காவேரி ஆறாய் பாய
கர்நாடகம் போல் அணை கட்டி தடை செய்கிறாள்
ஊரறிய காதல் செய்ய ஊறுகிற ஆசை நெஞ்சில்
ஊசியை தைக்கிறது நீயில்லா ஒவ்வொரு கணமும்
கா
பூவுக்குள் தேனாய் புதைந்துவிட்ட காதல்
மொட்டவிழ்க்கும் வரை மறைந்திருக்கும்
கனவுகள் பற்பல பேசி சிரித்து மகிழ்ந்தாலும்
தனிமையின் தழும்புகளில் தவித்திருந்தேன்
நீலப்பட்டாடை உடுத்திய தேவதை கண்டு
காலம் கூட கல்லாய் திகைத்து நிற்கும்
கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு
கைகள் இரண்டும் எங்கெங்கோ வருடும்
தேன்கனியவள் மாங்கனிகள் இரண்டும்
திகட்டாத மதுரமாக நாவினிலே தவழும்
இடையில் என் விரல்கள் மிருதங்கம் வாசிக்க
அவள் நாவோ நாதஸ்வர ஒலிகள் எழுப்பும்
கூடி மகிழ்ந்து குதூகலிக்க நினைத்தாலும்
கூடாது என்று காலம் தடை போடும்
பூட்டிவைப்பதால் காதல் புதைந்து விடாது
திறந்து காட்டும்போது புதையலாய் மின்னு
மிட்டாயை போல இனிக்கின்றன உன் விழிகள்
பட்டாடை உனக்குடுத்தி மாங்கல்யம் சூட்ட நினைத்தேன்
தொட்டாலும் பாவம் என விலகி நீ ஓடுகிறாய்
விட்டாலும் அகலாது நெஞ்சை விட்டு உன் நினைவு