காதல் பித்து

பித்து பிடித்து காதல் தலைலைக்கேறி
பிதற்றுகிறேன் உன் பெயரை சொல்லி
உனைப்பிரிந்த ஒவ்வொரு கணமும்
உழலுகிறேன் பூமி நரகமாக தெரிய
மூச்சுக்காற்றில் உன் தலை முடி வாசம்
நாடி துடிப்பிலும் உன் நாமம் ஒலித்தது
சிதறிய சலங்கை மணி போல் உன் சிரிப்பு
கோபத்தில் சுருங்கும் மூக்கின் முறைப்பு
மணிக்கணக்காய் கதைகள் பேசி உந்தன்
மடிதவழ் குழந்தையாய் வாழ வேண்டும்
கரும்பாய் இனிக்கும் கருவிழிகள் நினைந்து
கருமுகிலாய் கண்கள் கண்ணீர் வடிக்கும்
நினைவலைகளில் நிழலாய் நீ நடக்க
காலில் மிதிபட்ட பூச்சியாய் கசங்குகிறேன்
கட்டிலிலே படுத்து கதறுகிறேன் பெண்ணே
கட்டியணைத்தொரு முத்தம் தருவாயா

எழுதியவர் : நிழல்தாசன் (26-May-24, 12:36 am)
சேர்த்தது : நிழல்தாசன்
Tanglish : kaadhal paithu
பார்வை : 129

மேலே