சகோதரர் தின சிறப்பு கவிதை

#என்_சகோதரர்களே_நீங்கள்_படிப்பீர் என்ற நம்பிக்கையில் சகோதரர்கள்_தினம் பற்றி கவிதை எழுதியிருக்கிறேன் ...

படைப்பு கவிதை ரசிகன்
குமரேசன்

அண்ணன் என்றால்
தம்பியை
'வேர்வை நீரில்' சுமப்பான்...!

தம்பி என்றால்
அண்ணனை
'இதயத்தில்' சுமப்பான்.... !

'தங்கை' என்றால்
அண்ணனை
'கண்ணீரில்' சுமப்பாள்....!

'அண்ணன்' என்றால்
தங்கையை
'உயிரில்' சுமப்பான் .....!

இவர்களிடம்
'சண்டை' மட்டுமல்ல
'சமாதானமும்' இருக்கும்....!
'சாபம்'' மட்டும் அல்ல
'வாழ்த்தும்' இருக்கும்......!

இவர்களின்
கோபங்கள்
'உடல்களைக்' காயப்படுத்தும்
ஆனால்
ஒருபோதும்
'மனதைக்' காயப்படுத்தாது......!

படுக்கும் போது
'அடித்து'க் கொண்டாலும்
தூங்கும்போது
'அணைத்து'க் கொள்வார்கள்.... !

இவர்கள்
சண்டை போட்டுக் கொண்டு
'பேசாமல்' இருப்பார்கள்
'பிரிந்திருக்க' மாட்டார்கள்....!

'பிடுங்கி' சாப்பிட்டாலும்
ஒரே ! தட்டில்
"பிரியப்பட்டு" சாப்பிடுவார்கள்...!

ஒருவரை பற்றி ஒருவர்
அம்மா அப்பாவிடம்
தேவையில்லாமல்
'போட்டுக்' கொடுத்தாலும்
ஒருவர் மற்றவரின்
தேவையறிந்து
'கேட்டுக்' கொடுப்பார்கள்.....!

எதுவாக இருந்தாலும்
எல்லோரும்
அமைதியாக
'வேடிக்கை' தான் பார்ப்பார்கள் இவர்கள்தான்
'ஆகவேண்டியதைப்' பார்ப்பார்கள்...!

'வயது '
இவர்களைப் பிரித்தாலும்
'வாரிசுகள் '
இவர்களைச்
சேர்த்து விடும்....!.

சொத்துக்களை
'சட்டத்தால்' பிரிக்கலாம்
சொந்தங்களை
'எதனால்' பிரிப்பது....?

சொத்துக்களோடு வாழ்வது
'வளம் ' என்றால்
சொந்தங்களோடு வாழ்வது
' வரம் ' அல்லவா....!

தனியாக
'ஆஸ்தியோடு ' வாழ்ந்தாலும்
கடைசியில் வாழ்க்கை
' அஸ்தி 'த் தான் ஆகனும்....
ஏன் சொந்தங்களோடு வாழ்ந்து
வாழ்க்கையை
' சொர்க்கமாக்கக்' கூடாது ?

ஒரே ! பெண்ணில்
பிறந்தால்' மட்டுமல்ல
ஒரே ! மண்ணில் 'இறந்தாலும்'
சகோதரர்கள் தான்.... !"

🌺🌹அனைவருக்கும்
சகோதரர்கள் தின
நல்வாழ்த்துக்கள்🌹🌺

இவண்|

#கவிதை_ரசிகன்_குமரேசன்

எழுதியவர் : கவிதை ரசிகன் (24-May-24, 3:45 pm)
பார்வை : 31

மேலே