அருவக்காதல்

அருகிலே இருந்தாள் வெள்ளை உடுத்திய தேவதை
கருவிழிகள் கண்டதும் கன்னத்திலே ஒரு சிரிப்பு
பஞ்சு மிட்டாய் கன்னம் பட்டு நாராய் கூந்தல்
பார்த்தவுடன் நெஞ்சில் பட்டாம்பூச்சி படபடக்கும்
கன்னத்தில் முத்தமிட்டு கொஞ்சி பேசிடவில்லை
கொஞ்சம் பேசினாலும் நெஞ்சிலே நிறைந்தாள்
கூந்தலை எடுத்து அவள் காதின் பின்னால் விட்டு
கூச்சத்தில் அவள் நெளிவதை பார்க்க தோன்றியது
வாயோடு வாய் வைத்து பேச வேண்டிய மொழியை
வார்தைகளாலாவது கூட பேசி மகிழ முடியவில்லை
கண்களில் மட்டும் காதல் காவேரி ஆறாய் பாய
கர்நாடகம் போல் அணை கட்டி தடை செய்கிறாள்
ஊரறிய காதல் செய்ய ஊறுகிற ஆசை நெஞ்சில்
ஊசியை தைக்கிறது நீயில்லா ஒவ்வொரு கணமும்
காலம் கனிய கைப்பிடிப்பேன் பெண்ணே உன்னை
பிடித்த கை பிரியாது உடல் விட்டு உயிர் பிரிந்தாலும்

எழுதியவர் : நிழல்தாசன் (23-May-24, 11:13 pm)
சேர்த்தது : நிழல்தாசன்
பார்வை : 85

மேலே