ரகசியம்

என் காதல் மனதில் தோன்றிய
ஆயிரம் எண்ணங்களை
உன்னிடம் சொல்லாமல்
மனசுக்குள் ரகசியமாக
வேலி போட்டு வைத்தேன்

நான் உறங்கும் நேரத்தில்
எந்தன் எண்ணங்கள்
திருட்டுத்தனமாக
வேலி தாண்டி வந்து
உந்தன் காதில்
ரகசியமாக சொல்லிவிட்டு
மீண்டும் என்னிடமே
தஞ்சம் கொண்டது....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (23-May-24, 9:20 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ragasiyam
பார்வை : 162

மேலே