21ம் நூற்றாண்டின் சாதனைகள்
👍👍👍👍👍👍👍👍👍👍👍
*21 ஆம் நூற்றாண்டின்*
*சாதனைகள்..*
படைப்பு ; *கவிதை ரசிகன்*
குமரேசன்
👍👍👍👍👍👍👍👍👍👍👍
சாலையோர மரங்கள்
செடியானதும்....
உள்ளாடைகள்
மேலாடையானதும்...
கூட்டுக் குடும்பங்கள்
தனிக்குடும்பமானதும்....
கல்வி
வியாபாரம் ஆனதும்.....
கேளிகை அரங்கம்
கேலி அரங்கமானதும்.....
காதல்
பொழுதுபோக்கானதும்....
உண்மையை
நாடு கடத்தியதும்...
நேர்மையை
அடகு வைத்ததும்.....
மனிதம்
மரித்து போனதும்
ஊழலும் வஞ்சமும்
உல்லாசமாய் வாழ்ந்ததும்....
நாகரீகம்
நாறிப்போனதும்....
நீர் நிலைகளுக்கே
தாகம் எடுத்ததும்...
விளை நிலங்கள்
விலை நிலங்கள் ஆனதும்....
ஏரிகள்
வீடானதும்.....!
குளங்கள்
குப்பை மேடானதும்....
ஆறுகள்
சாக்கடையானதும்....
கடல்களில்
பிளாஸ்டிக் நீந்துவதும்.....
காற்றுக்கு
பஞ்சம் வந்ததும்....
வானத்தில்
ஓட்டை விழுந்ததும்....
பூமிக்கு
காய்ச்சல் வந்ததும்....
காடுகளுக்கு
மரணம் வந்ததும்....
சுற்றுச்சூழல்
விஷமானதும்.....
விவசாயிகள்
உரமானதும்......
விவசாயம்
பட்டுப்போனதும்......
சனி பகவானே
நாட்டை ஆண்டதும்.....
இலவசங்களே
மக்களை வழி நடத்தியதும்...
தலைமுறைகள்
தடம்மாறிப் போனதும்....
வன்முறைகள்
தலைவிரித்தாடியதும்...
அரசியல் ஆன்மிகமானதும்....
ஆன்மிகம் அரசியலானதும்....
மது பாட்டில்களும்
பிளாஸ்டிக் கிளாஷ்களும்
நமது
அடையாளங்களாக
புதைந்து போனதும்.!
21ம் நூற்றாண்டின்
சாதனைகளாக இருக்கும்....!!!
*கவிதை ரசிகன் குமரேசன்*
👍👍👍👍👍👍👍👍👍👍👍