என்ன கண்டோம்

பள்ளிப் பருவத்தில் பள்ளியை கண்டோம்
அங்கே புத்தகத்தில் பாடங்கள் கண்டோம்
பாடங்களை படித்து தேர்வுகள் கண்டோம்
தேர்வுகள் முடித்து கல்லூரியை கண்டோம்
கல்லூரியில் நாம் ஒரு மாற்றம் கண்டோம்
பின், சம்பாதித்திட ஒரு வேலை கண்டோம்
வேலை கிடைத்த பின் சம்பளம் கண்டோம்
பணிகள் புரிந்துப் பதவி உயர்வு கண்டோம்
செலவு செய்திட ஒரு திருமணம் கண்டோம்
அவ்விளைவினால் குழந்தைகள் கண்டோம்
பிள்ளைகளின் உயர்வில் இன்பம் கண்டோம்
கடமையென அவர்களின் மணம் கண்டோம்
விரைவில் அவர்கட்கு மழலைகள் கண்டோம்
இடையில் எண்ணற்ற பிரச்சினை கண்டோம்
இப்போது வயதாகிவிட்டது என்று கண்டோம்
காலம் நம் வாழ்வை கரைத்திடக் கண்டோம்
உணர்கிறோம் என்ன செய்தோம் கண்டோம்
இறுதிப்பயணம் என்று யார்தான் கண்டோம்?

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (7-Nov-24, 2:37 pm)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : yenna kandom
பார்வை : 76

மேலே