ஏழு எட்டு இங்க வாடா
எனக்கு எதுக்கு அப்பா இந்தப் பேரை
வச்சீங்க?
@@@@@@
அந்தப் பேருக்கு என்னடா குறைச்சல்?
பகவான் பெருமாள் வாசம் செய்யற
இடத்துப் பேரை வச்சோம். அதில் என்னடா
குறையைக் கண்டுபிடிச்ச?
@@@@@@@@
எனக்கு நீங்க தமிழ்ப் பேரை வச்சு அசிங்கப்
படுத்திட்டீங்க.
@@@@@@
உன் பேரிள்ள என்னடா குறை?
@@@@@@@@
என் கூடப் படிக்கிறவங்களைக்
கேளுங்க? என் வகுப்பில என்னைத் தவிர
எல்லரோட பேருங்களும் இந்திப் பேருங்க.
என் பேரு மட்டும் தமிழ்ப் பேரு. அடிக்கடி
சில குறும்புக்கார பையன்களும்
மாணவிகளும் "ஹலோ மிஸ்டர் செவன்
ஹில்ஸ். என்ன மலை? ஏழு மலை, ஏழு, எட்டு. இங்க வாடா " இது
மாதிரி நாள்தோறும் என்னைக் கிண்டல்
பண்ணினா நான் எத்தனை நாளைக்கு
மனவேதனையோட நல்லாப் படிக்க
முடியும்?
@@@##@#
உனக்குத் தமிழ்ப் பேரை வச்சது எங்கள்
தப்புத்தான்டா கண்ணு. அதே பேரை
சமஸ்கிருதப் பேரா மாத்திட்டா உன்
வகுப்புத் தோழர்களும் தோழிகளும்
உன் பேரை "ஸ்வீட் நேம்"னு
சொல்லுவாங்கடா கண்ணு.
@@@@@@@
அந்தப் பேரைச் சொல்லுங்க அப்பா.
@@@@@@@
ஷப்தகிரி. இந்தப் பெயர் மாற்றம்
நாளைக்கே நாளிதழ்களில் வெளியாகும்.
அரசிதழிலும் வெளியிட ஏற்பாடு
செய்யறேன். நாளையிலிருந்து நீ
ஏழுமலை இல்லைடா கண்ணு. நீ
'ஷப்தகிரி, ஷப்தகிரி, ஷப்தகிரி'. போதுமா?
@@@@@@@
ரொம்ப நன்றி அப்பா. இனிமேல் கண்டிப்பா மன