வெக்கமா இருக்குதடா பசங்களா

டேய் நெத்திக்குத்து நடேசு, மண்டையடி மண்ணாங்கட்டி, பிளேடு


பிரதீப்பு, வீச்சரிவா விக்குநேசு, கோலிக்குண்டு கோமேசு,


சல்லிக்கல்லு சாகேசு நாமெல்லாம் ரவுடிங்கனு சொல்லிக்கவே


வெக்கமா இருக்குதடா பசங்களா.


@@@@@@@@@@@@@@



என்ன அண்ணே சொல்லறீங்க? ரவுடித் தொழில் வெக்கப்பட



வேண்டிய தொழில்னு சொல்லறீங்களா?

@@@@@@@@@@@


நாம ஏண்டா வெக்கப்படணும். செய்யும் தொழிலே தெய்வம்னு


யாரோ சொன்னதாக் கேள்விப்பட்டிருக்கிறேன்.


@@@@@@




(எல்லோரும்): ஆமாம் அண்ணே, நாங்களும்



கேள்விப்பட்டிருக்கிறோம்.



@@@@@@@@@@@


அது இல்லடா மடப்பசங்களா. நம்ம ரவுடிகள் தொகை


கொறஞ்சுட்டே போகுது.


@@@@@@@@@@@@


எப்பிடி அண்ணே கொறையுது?


@@@@@௨

மடையா? வீட்டிலிருக்கிற போது தொலைக்காட்சிச் செய்தி கேக்கற


பழக்கம் இல்லையா? நம்மளவிடப் பிரபலமா இருந்த ரவுடிகள்,



நமக்கு ரவுடித்தனத்துக்குப் பயிற்சி அளித்த குரு ரவுடிகள் எல்லாம்



ரவுடிகளுக்கு முன்னுரிமை குடுத்து சேத்துக்கிற கடசிகள்ல சேர்ந்து


மாநில அளவிலான பதவிகள்ல இருக்குறாங்க. நாம தன்மானத்தை


அடகு வச்சு வேற கட்சிகள்ல சேரக்கூடாது. நமக்குன்னு தனிக் கட்சி


தேவை. தனிச் சின்னம். தனிக் கொடி. ஒரு பெரிய அலுவலகம்.


இதெல்லாம் தேவைடா.


@@@@@@@@@@@@@@@


என்ன செய்யலாம் அண்ணே?


@@@@@@@@@@@@@


நான் தனியார் உளவாளி மூலம் மாநிலத்தில் உள்ள ரவுடிகள்



எண்ணிக்கை கணக்கெடுப்பு நடத்தினேன். எந்தக் கட்சியிலும்


சேராத சின்னச் சின்ன ரவுடிகள் அம்பதாயிரம் பேர் இருக்கிறாங்க.


நம்ம கூட்டத்தில இருக்கிற நூறு ரவுடிகள் தான் அனுபவம் மிகுந்த


மூத்த ரவுடிகள். அந்த அம்பதாயிரம் பேரையும் இணைச்சு நாம


ஒரு கட்சி ஆரம்பிக்கணும். இது ரவுடிகள் கட்சினு காவல்துறைக்குத்


தெரியக்கூடாது. நம்ம கட்சியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு


செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பத்திரப் பதிவுத் துறையில்


நம்ம கட்சிப் பேரைப் பதிவு செஞ்சாப் போதும். செய்திதாள்ல


விளம்பரம் குடுத்தாப் போதும். நம்ம கட்சி இருப்பது அரசியல்


கட்சிகளுக்குத் தெரிஞ்சாப் போதும். தொண்டர்களே இல்லாத


எத்தனையோ கட்சிகள் நாட்டில இருக்குது. அந்தக் கட்சிகள்



தேர்தல் நேரத்தில் செயிக்கிற கட்சியாப் பாத்து கூட்டணி வச்சு


செயிச்சு அவுங்களுக்கு வேண்டியதைச் சாதிச்சுக்குறாங்க. அது


மாதிரி நாமும் பணக்காரக் கட்சிகளாப் பாத்து ஆதரவு தர்றதா



அறிவிச்சாப் போதும். நமக்கும் நம்ம கட்சி உறுப்பினர்களுக்கும்



பத்து வருசத்துக்குத் தேவையானதைக்கூடச் செய்வாங்க. அது


போதும்டா நமக்கு. சரி. அதப்பத்தி விரிவா அடுத்த கூட்டத்தில


விவாதிக்கலாம். போயிட்டு வாங்கடா தங்கக் கட்டிகளா!

எழுதியவர் : மலர் (3-Nov-24, 6:17 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 40

மேலே