உழைச்சு என்ன பிரயோசனம்
தம்பி, நீ உங்க கட்சில பிரபலமான
பேச்சாளர். எங்க கட்சில சேர ஏன்
ஆசைப்படற?
@@@@@@@@@
அந்தக் கட்சில இருபது வருசமா நான்
பேச்சாளர். எல்லா ஊருக்கும் போறேன்.
பேசறேன். கை தட்டறாங்க. தங்கும் வசதி.
நல்ல சாப்பாடு. ஒரு கூட்டத்தில் பேசினா
ஐயாயிரம் ரூபாய் தர்றாங்க. மாதம்
இருபது கூட்டம். காரில் அழைச்சிட்ட
போறாங்க. அப்படியே சுற்றுப் பயணத்தில்
காலம் கழியுது.
@@@@@@#
தம்பி உனக்கு போக்குவரத்து செலவு
கிடையாது. தங்க வசதியான உணவகம்.
நல்ல உணவு. மாதம் குறைந்தபட்சம்
ஒரு இலட்சம் வருமானம். இதுக்கு மேல
நீ உங்க கட்சில என்ன எதிர்பார்க்கிற?
@@@@@@
ஐயா, நீங்க முதுபெரும் தலைவர். உங்க
கட்சில சேர்ந்த உடனே ரவுடிகளுக்குக்கூட
மாநில அளவிலான பதவி தர்றீங்க.
ஆனால் எங்க கட்சில அது மாதிரி உயர்
பதவி தர்றதில்லீங்க.
@@@@@@@
அப்ப எங்க கட்சில சேர வந்திருக்கிறனு
சொல்லு.
@@@@@@@
ஆமாங்க ஐயா.
@@@@@@@
சரி உனக்கு எங்க கட்சில மாநில
நட்சத்திரப் பேச்சாளர் அமைப்புத் தலைவர்
பதவி. மாதம்
இரண்டு இலட்சம் சம்பளம். கட்சி செலவில்
போக்குவரத்து நட்சத்திர 🔯 உணவகம்
தங்க, உண்ண. குடும்பத்துக்கு
சென்னையில் ஒரு பங்களா. இதெல்லாம்
தர்றோம். ஆனா நீ செய்ய வேண்டியது
எங்க கட்சியை வளர்க்க உண்மையைத்
தவிர எதை வேண்டுமானாலும் பேச
வேண்டும். இதற்கு சம்மதமா?
@@@@@@@
ஐயா, அந்தக் கட்சில ஒருசில பொய்களைப்
பேச அனுமதி உண்டு. இந்தக் கட்சில
ஒரு உண்மையைக் கூட வாய் தவறிக்
கூடப் பேசக்கூடாது. சரியிங்களா?
@@@@@@
இது போதும் தம்பி. உன் பேர் என்ன?
@@@@@@@
நிரஞ்சன் ஐயா.
@@@@@@@
இது தமிழ்ப் பேரு இல்ல. தமிழ் மக்களை
நம்ப வைத்து ஏமாத்தணும்னா நல்ல
கவர்ச்சியான தமிழ்ப் பேரை
வச்சுக்கணும். இன்று முதல் நீ 'புரட்சித்
திருமேனி'.
#@@@@@@#
டேய் ஏகாம்பரம் இங்க வாடா.
@@@@@
ஐயா?
@@@££
இவர் நமது கட்சியின் மாநில நட்சத்திரப்
பேச்சாளர் அமைப்புத் தலைவர். மூணாவது
மாடில இவருக்கு ஒரு குளிர்சாதன
அறையை ஒதுக்கிக் கொடு. ஒரு காரும்
ஓட்டுநரும் ஒதுக்கு. குடும்பத்துக்கு
மைலாப்பூர்ல மாநில அளவிலான
தலைவர்களுக்குக் கட்டப்பட்ட பங்களா
ஒன்றை ஒதுக்கிக் கொடுத்துவிடு.
அடையாள அட்டையை மறக்காதே.
@@@@£
சரிங்க ஐயா.
@@@@@
என்ன 'புரட்சித் திருமேனி'யாரே இந்த
வசதிகள் போதுமா?
@@@@@
போதுங்க ஐயா.