நிற்கவில்லை

நிற்கவில்லை ....!
22 / 05 / 2024
கருங் கூந்தல் சிக்கலில் சிக்கி
நான் தொலைந்தேன்
விடுபட்டு
பிறை நெற்றியின் வழுவழப்பில்
வழுக்கி
கருவிழி கடலில் விழுந்து
என்னைத் தொலைத்தேன்.
திக்கு முக்காடி மூச்சுமுட்ட
கூர்மூக்கின் சறுக்கலில்
சறுக்கி
இதழெனும் தேன் அடையில்
முங்கி
கொஞ்சி பேசிடும்
கிளிப் பேச்சினில்
நான் தொலைந்தேன்
சங்கெனும் கழுத்தில்
இறங்கி
பூரிக்கும் இளமையின்
பள்ளத்தாக்கில்
என்னைத் தொலைத்தேன்.
வழுக்கி வளையும்
இடுப்பின் வளைவுகளில்
வளைந்து வளைந்து
செவ்வரியோடிய
பூம்பாதத்தில்
மீண்டும் தொலைந்தேன்.
தொலைத்ததை தொலைந்ததை
தேடித்தேடி தினம்தினம்
ஓடித் திரிகிறேன்.
தொலைத்ததும் என்னவென்று
புரியவில்லை
தொலைந்தஇடம் எதுவென்றும்
தெரியவில்லை.
தேடுவது மட்டும்
இன்னும்
நிற்கவில்லை ....!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (22-May-24, 5:06 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : nirkavillai
பார்வை : 124

மேலே