பிறந்தநாள் வாழ்த்து க்கவி

பிறந்தநாள் வாழ்த்துக்கவி

உங்களுக்கு இன்று பிறந்தநாள்
எங்களுக்கு
அது சிறந்த நாள்

மக்களெல்லாம்
கவலை மறந்த நாள்
பறவைகள்
மகிழ்ச்சியில் பறந்த நாள்
எளியோர்கள்
துக்கம் துறந்த நாள்

அவர்களுக்கு தூக்கம் பிறந்தநாள்
ஏழைகள் தட்டிய கதவு திறந்த நாள்
அவர்களின் கண்ணீர் துளி இறந்த நாள்

உன்னை படைத்ததால்
பிரம்மனே இன்பத்தில் உறைந்த நாள்
வரியோர்களின் ஏழ்மை மறைந்த நாள்

துன்பம் இன்பத்திற்குள் கரைந்த நாள்
உங்கள் தாய் தந்தையரால் ரவிவர்மனை விட அழகான ஓவியம்
வரைந்த நாள்

பாட்டாளி மக்களின் பணிச்சுமை
குறைந்த நாள்
அவர்கள் வாழ்வில் கனிச்சுவை
நிறைந்த நாள்


எல்லோரும் தொப்புள் கொடி இறக்கிப் பிறக்கின்றோம்
நீங்கள் மட்டும் தேசிய கொடியை ஏற்றி பிறந்தீர்கள்


உங்கள் கரம் கரம் அல்ல அது தேசியக் கொடியின் சக்கரம்
உங்கள் கரம் கரம் அல்ல அது இமயமலையின் சிகரம்

உங்கள் கரம் ஏழைகள் வாழ எப்போதும் கொடுத்துக் கொண்டே இருக்கின்றது வரம்
நீ மண்ணுள் தோன்றாது ஒரு பெண்ணுள் தோன்றிய வைரம்

மன்னனும் நீ கண்ணனும் நீ மாதவனும் நீ யாதவனும் நீ
பரசுராமனும் நீ பராந்தகனும்நீ
மதனும் நீ மன்மதனும் நீ


நீ அனைத்தவன் ஏழையின் வயிற்றில்
நெருப்பை
அனைத்தவன்

நீ அறிவில்லாதவன்
ஆம் நீ அறிவில்
ஆதவன்

நீயோ சோமாரி
ஏழைகளின் காய்ந்த நிலத்தில் சோ எனப் பெய்யும் மாரி

நீ முடிச்சவிக்கி
ஏழைகள் முன்னேறாது அவர்கள் க காலில் கட்டி இருந்த கயிற்றின் முடிச்சுகளை அவிழ்த்தவன்

அனைவருக்கும் அவர்களின் அன்னை
சோறு ஊட்ட காட்டியது அம்புலி
உன் அன்னை உனக்கு
காட்டியதோ வெம்புலி


நீங்கள் இமயமலை உயரத்தில் இருப்பவர் இல்லை ஏழைகளின் இமைகளில் கண்ணீர் சிந்தும் போது அவர்களின் துயரத்தில் இருப்பவர்

உன் கைகள் சற்றே குட்டையானது ஏழைகள் கண்ணீர் துடைப்பதில் கைகுட்டையானது

உன் உயரமோ சற்றுக் குள்ளல் ஆனால் பிறருக்கு வாரி வழங்குவதில் நீ வள்ளல்

ஏழைகளுக்கு நீ ஒரு மாரி
எதிரிகளுக்கோ நீ ஒரு மாறி
நீ கருமாரி வடிவில் உருமாறி ஏழைகள் நிலத்தில் பொழிந்து
வாழ வைக்கும் கருமாரி

பிறந்தநாள் அன்று நீ வெட்டுகிறாய் கேக்கு உன் உடம்பு வயசானாலும் இன்னும் அது தேக்கு

துபாய்ல இருக்குறது ஷேக்கு
ஐஸ்கிரீம் கூட மில்க் அடிச்சா வரும் ஷேக்கு.
நீ அடிக்காமலேயே உன் எதிரிக்கு வரும் சீக்கு
நீ பார்த்தாலே போதும் வாய் போட்டுக்கும் வெத்தலை பாக்கு.


பொய்யை எப்போதும் சொல்லாத உன் நாக்கு செய்யறேன்னு நீ
நீ என்னைக்கு மீறியதே இல்லை சொன்ன வாக்கு
நீ தேர்தல்ல நின்னா மக்கள் எல்லாம் உனக்கு போடுவாங்க வாக்கு
உனக்கு ஆரத்தி எடுப்பாங்க வெத்தலை மேல வச்சு பாக்கு

ஜெயிச்சு வந்து நீ அவங்க குறைகளை போக்கு அவங்க மனசுல இருக்குற கவலையை நீக்கு
பள்ளத்தில் கிடைக்கும் ஏழை மக்களை நீ தூக்கு


நீ ஊராண்டும் இப் பாராண்டும்
நூறாண்டும் வாழ அன்போடு வாழ்த்துகிறோம்

இந்திய பெருங்கடலாய் உன் புகழ் நீண்டு இருக்கட்டும் இவ்வுலகை ஆண்டு இருக்கட்டும் அதற்கு துணையாய் இந்த ஆண்டு இருக்கட்டும்

எழுதியவர் : (21-May-24, 11:20 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 60

மேலே