மனிதம் தேடும் மனிதன்
என்றோ துளைத்துவிட்டதை
இன்றாவது கண்டுபிடிக்க
இரவு பகலாக ஏக்கத்தோடு எத்தனையோ மனிதர்கள் !
கால மாற்றத்தில்
கடுகளவும் காணப்படாத கருணை -
அறிவியல் வளர்ச்சியில்
அன்பிற்குத்தான் பற்றாக்குறை !
இனிமையை கொடுக்கும் கரும்பும்
நாட்கள் கடந்தும் கெட்டுவிடாத தேனும்
இயற்கை கொடுத்த கனிசுவையும் மாறிடாத போது
மனிதத்தன்மை மட்டும் மாறிவிட்டதேன் !
வதைகளைகூட ரசிப்பதும் வெறுப்பதும்
அவரவர் சாந்தவைகளாகிவிட்ட போது
நேயம் வெளிப்பட நியாயமான காரணம் இல்லை !
பகிர்ந்து உண்பதும் பரிவு காட்டுவதும்
துன்பத்தில் தோள்கொடுத்து துயர் கலைப்பதும்
தோற்றலில் தேற்றலும் என
எதுவுமே இன்று மனிதனிடம் காணப்படாத குணங்களாகிவிட்டன !
விதைக்காமல் எப்படி அறுக்க முடியும் -
கொடுக்காததை எப்படி கேட்க முடியும் -
அன்பும் , கருணையும் , நேசமும் எல்லாமே அப்படித்தான் !
மனிதநேயம் -காணமுடியாத ஒன்று
ஆனால் உணர்தல் சாத்தியம்
நீ எதிர்பார்ப்பதை பிறருக்கு கொடு
நீ எதிர்பார்க்காமலேயே எல்லாம் கிடைக்கும் !