காதல் பெருகதடி

காதல் பெருகதடி
19 / 05 / 2024

மீண்டும் காதல் பெருகுதடி சகியே
மீண்டும் காதல் பெருகதடி
கண்டவுடன் காதலில் வீழ்ந்தேன்
பழைய கதையடி
அது காதலா? காமமா? புரியாமல்
சுற்றிச்சுற்றி வந்தேனே
இளமையின் நீர்வீழ்ச்சியில்
நிலைதடுமாறி நனைந்திருந்தேனே
காலங்கள் ஓட காதலும் காமமும்
கரைந்துதான் போனதே
வாழ்க்கையின் கோர கைகளால்
நசுக்கப்பட்டு பிழியப்பட்டு
ஏற்ற இறக்கத்தில்
தடுமாறி நிற்கையில்
கையோடு கையாய்
தோளோடு தோளாய்
கைவிடாமல் நின்ற என் தோழியே
மீண்டும் என் மனதில்
காதல் வளருதடி
வாழ்வில் கர்வமும்
பெருகதடி
உன் அணைப்பினில்
தாய் மடியின் கதகதப்பும்
கருணையும் உணர்ந்தேனடி
காமம் அடங்கி உண்மை
காதல் பெருகதடி சகியே
காதல் பெருகதடி மீண்டும்
காதல் பெருகதடி

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (19-May-24, 9:27 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 157

மேலே