நன்மதி வெண்பா - நூல் - பாடல் 64
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
செறிபொருள்சே ரம்பனுவல் தீஞ்சுவையார் கீதம்
அறிவிலிக்கி சைக்க வணுகல் - உறுமொலிகொள்
காதி(ல்)செவி டன்பாற்போய்க் கம்பெடுத்துப் பம்பம்மென்
றூதலென நன்மதியே யோது! 64