மழைத்துளி

செக்கச் சிவந்த வானத்தில் - ஓர்
சேதமடைந்த மேகம் - அது
சேர்த்து வைத்த மழைத்துளியினை
இழுக்கும் உந்தன் தேகம்

நீ இருக்கும் நேரம் பார்த்து
நிமிடத்திலே வருமே - உன்
கண்ணின் ஓரம் ஊர்ந்து அது
கடிதம் ஒன்று தருமே

முத்து போன்ற பல்லிடுக்கில்
முத்தம் ரெண்டு கொடுக்கும்
உன் முன் அழகில் மூச்சு முட்டி
மூர்ச்சை ஆகி கிடக்கும்

நீ குடிக்கும் நீரும் ஆக
மாறத்தானே துடிக்கும் உன்
எச்சில் பட்டே எமலோகம்
செல்ல அது துடிக்கும்

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (26-May-24, 4:10 pm)
சேர்த்தது : Kannan selvaraj
Tanglish : mazhaithuli
பார்வை : 92

மேலே