உரிமைக்குரல்

சிறகொடிந்த பறவையாக சிறுமைப்பட்ட மக்கள்
சிறுத்தைகளை கிளர்ந்தெழ சிங்கங்கள் மிரண்டன
உரிமைக்குரல்கள் ஊமைக்குரலாக்கப்பட்ட பின்
உறவுகளை நினைய கூடாதாம் உத்தரவு போடுகின்றனர்
கூடுகட்டி கூப்பாடு போட்டு கூத்தடித்து களிப்போர்
கஞ்சி கொடுக்கவும் விடாது வஞ்சிப்பது ஏனோ
பதினைந்து ஆண்டுகள் பறந்திட்ட பின்னனும் நெஞ்சில்
பதிந்திட்ட காயங்கள் இன்னும் ஆறாத வடுவாய்

எழுதியவர் : நிழல்தாசன் (24-May-24, 1:06 pm)
சேர்த்தது : நிழல்தாசன்
பார்வை : 40

மேலே