நானெதை வெல்வது

நானெதை வெல்வது?
17 / 05 / 2024

நானென்ன சொல்வது? - இங்கு
நானென்ன சொல்வது?
நடப்பவை யாவும் நடந்தேதீரும் - இதில்
நானெதை வெல்வது?

விடையே இல்லாத விடுகதையாய்
வாழ்வின் முடிச்சுக்கள் சிக்கியே
நானென்ன சொல்வது? - இங்கு
நானெதை வெல்வது?

முடிவே இல்லாத நெடும்பயண
யாத்திரையில் இணையாத நிலையில்
நானென்ன சொல்வது? - இங்கு
நானெதை வெல்வது?

இன்று இருப்பது நாளை
இல்லாதுபோகும் இவ்வுலகினில்
நானென்ன சொல்வது? - இங்கு
நானெதை வெல்வது?

உண்மையை ஓரங்கட்டி உலகில்
பொய்மையே ஆளும் இந்நாளில்
நானென்ன சொல்வது? - இங்கு
நானெதை வெல்வது?

கண்ணுக்குமுன் அரங்கேறும் அவலங்கள்
கண்டு மனம் கொதிக்கவே
நானென்ன சொல்வது? - இங்கு
நானெதை வெல்வது?

வெளிப்படை வேஷமிட்டு வேதனைகள்
தனைமறைத்து சிரித்திடும் வேளையில்
நானென்ன சொல்வது? - இங்கு
நானெதை வெல்வது?

மதியாதார் இவ்விளைய தலைமுறை
புதியதாய் அவருக்கு புரியும்படி
நானென்ன சொல்வது? - இங்கு
நானெதை வெல்வது?

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (17-May-24, 6:55 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 54

மேலே