மகனதிகாரம்

நீ அப்பா என்றழைக்கும்
ஒற்றை வார்த்தையில்
கலைந்து போகிறது
என் கவலை மேகங்கள்!!

உன் மழலை மொழியே
என் உலகின்
செம்மொழி!!

உன் கற்பனைக் கதைகளை
கண்டதில்லை எந்த
காமிக்ஸ் புத்தகத்திலும்...

நீ ஓடி வந்து
அணைத்துக்கொள்ளும்போதெல்லாம்
நினைத்துகொள்கிறேன்
என் அப்பாவை..

உன்னை சீருடையில்
முதன்முதலில் பார்க்கும்போது
பெருமிதம் கொண்டேன்!!
போர் வீரனாய் உன்னை நினைத்து...

உன் பேச்சும் நடையும்
புன்சிரிப்பும்
நினைவுபடுத்துகின்றன..
நீ மகன் அல்ல
என் தந்தையின் நகல் என்று...

ஆண்பிள்ளைகள்
அப்பாவின் மறுபிறவி...

எழுதியவர் : சுரேந்தர் கண்ணன் (6-Jun-24, 8:50 pm)
சேர்த்தது : சுரேந்தர் கண்ணன்
பார்வை : 52

மேலே