கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்

தோற்றம் கண்டு
ஏமாற்றம் கொள்ளாதே/
ஏற்றமான விஞ்ஞானத்தின்
மாற்றம் இதுவே/

தோற்றுப் போகிறது
இயற்கை வளமெல்லாம்/
செயற்கையின் வளர்ச்சி
வியர்ப்பைக் கொடுப்பதனாலே/

ஏளாம் அறிவையும்
கடக்கிறான் ஆறாமறிவாளி/
ஆகையால் மனங்களை
மயக்குகிறான் சாயங்களாலே/

வேரோடிய நிலமெல்லாம்
தாரோடிய பாதைகளே/
பாறையிலும் செடிகொடி
படர்வதைப் பாருங்களேன் /

ஆக்கமும் ஊக்கமும்
அறிவும் அதிகரிப்பினாலே/
வேலிகளும் போலிகளாகலாம்
கண்ணை நம்பாதே/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (7-Jun-24, 7:19 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 39

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே