வாகனம்

காலில் சக்கரம்
கட்டாதக் குறையாய்
ஓடிக்கொண்டிருக்கிறது
வாழ்க்கை வண்டி;
வாகனம் இருந்தால்
வசதியாக இருக்கும் தான்.
நலம்விரும்பிகளுக்கு
நான் சொல்ல விரும்புவதெல்லாம்
ரிஷபமாய்...
மூஷிகமாய்...
கருடனாய்...
யானையாய்...
எம்பெருமான்களின் டிரான்ஸ்போர்ட்டிற்கு
இவையே
ஏதுவாக இருக்கும்போது
நமக்கெதற்கு
ஹோண்டாவும்
ஹுண்டாயும் ?

எழுதியவர் : ஜ. கோபிநாத் (18-May-24, 6:41 pm)
சேர்த்தது : Gopinath J
பார்வை : 29

மேலே