நதியோரம் வந்தாய் நடந்து

புதியகொடி யில்பூத்த புத்தம் புதுப்பூ
நதியிடம் வந்து நலம்விசா ரிக்க
மதிமயங்கச் செய்திடும் மஞ்சள் நிறத்தில்
நதியோரம் வந்தாய் நடந்து
யாப்புக் குறிப்புகள் :--
---ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
எதுகை ---புதி நதி மதி நதி
மோனை 1 3 ஆம் சீரில் -- பு பு ந ந ம ம ந ந
புதியகொடி யில்பூத்த புத்தம் புதுப்பூ
நதியிடம் வந்து நலம்விசா ரிக்க
மதிமயங்கச் செய்திடும் மஞ்சள் நிறத்தில்
நதியோரம் வந்தாய் நடந்துநீயும் கேட்டாய்
நதியே நலம்தானே நீ
யாப்புக் குறிப்புகள் :--
----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
5 அடிமுதல் 12 அடிவரை அமைவது பஃறொடை வெண்பா
எதுகை ---புதி நதி மதி நதி நதி
மோனை 1 3 ஆம் சீரில் -- பு பு ந ந ம ம ந ந ந நீ
எதுகையும் மோனையும் பா வின் தொடை எனப்படும்
பூவினைப்போல் பா வைத் தொடுத்தலால் தொடை என்பர் தொன்னூலார்
எதுகை மோனை இன்றி பல விகற்பத்தாலும் வெண்பா அமையும்
தளை தட்டா சீரமைதி கொண்டு பொருளால் அழகு பெறும் இவ்வகை வெண்பா