வெண்ணிலா வஞ்சியேநீ வா

செம்மலராய் பூத்திருக்கும் செந்தா மரைக்குளத்தில்
செம்மைக் கதிரொளி சித்திரம் தீட்டிட
வெண்மை இலக்கண வெண்பாவைப் போல்வந்த
வெண்ணிலா வஞ்சியேநீ வா
---இரு விகற்பஇன்னிசை வெண்பா
செம்மலராய் பூத்திருக்கும் செந்தா மரைக்குளத்தில்
செம்மைக் கதிர்தீட்டும் சித்திரம் - பொம்மைபோல்
வெண்மை இலக்கண வெண்பாவைப் போல்வந்த
வெண்ணிலா வஞ்சியேநீ வா
---இரு விகற்ப நேரிசை வெண்பா
செம்மலராய் பூத்திருக்கும் செந்தா மரைக்குளத்தில்
செம்மைக் கதிரொளி சித்திரம் தீட்டிட
வெண்மை இலக்கண வெண்பாவைப் போல்வந்த
வெண்ணிலா வஞ்சியேநீ வாவந்து இங்கமர்
வெண்சா மரம்வீச வோ
----பல விகற்ப பஃறொடை வெண்பா