சிலையினிலே உன்னையே வடிக்க

கலைந்தாடும் கூந்தலில் தென்றல் மேக ஓவியம் வரையுதோ
சிலைபோல் மேனியில் செந்தாமரை செந்தமிழ் கவிதை எழுதுதோ
அலையெலாம்நீ நீராடும் போதில் ஆனந்த ராகங்கள் பாடுமோ
சிலையில் உன்னை வடிக்க கிரேக்க வெண்பளிங்கு எடுத்துவரவோ
----அடிதோறும் பலவாய்ப்பாட்டில் அமைந்த விருத்தம்
கலைந்தாடும் கூந்தலில் தென்றல் மேக ஓவியம் வரையுதோ
சிலைபோன்ற மேனியில் செம்பூ தமிழில் கவியதை எழுதுதோ
அலைநீநீ ராடிட அங்கே அழகு இசையினைப் பாடுமோ
சிலையினிலே உன்னையே வடிக்க கிரேக்க பளிங்குதான் வேண்டுமோ
----முதலடியில் பயின்று வரும் "காய் விளம் மா மா விளம் விளம்" வாய்ப்பாடே
பிற அடிகளிலும் பயின்று வருமாறு சற்று மாற்றியமைக்கப்பட்ட
அறுர்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்