நெஞ்சைத் தந்து விடு

நெஞ்சையள்ளிச் சொல்லுதே நீலவிழி யின்பார்வை
மஞ்சள்வா னத்தின்அம் மாலைக் கதிரவனும்
கொஞ்சம் தயங்கித் தயங்கியே செல்கிறான்பார்
வஞ்சிநெஞ்சைத் தந்து விடு

---ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
எதுகை --- நெஞ் மஞ் கொஞ் வஞ்

மோனை 1 3 ஆம் சீரில் ---நெ நீ ம மா கொ த வ வி

எழுதியவர் : கவின் சாரலன் (24-Sep-24, 9:52 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 5

மேலே