அழகன் - ஆனந்தி

மலர் மாலையை
மாணிக்க மாலைக்கு
சூட்டியது யாரோ?

அந்தி வானமே
கடன் கேட்டு
தவிக்குது அவனது
மேனியின்
வண்ணத்(தை)தில்....

எம்மங்கையும்
மையலாவாள் அவனது
தேன் சொறியும்
இதழினில்....

துருவமே சிதறி
கிடக்கிறது அவனது
புருவ அழகினில்....

புனிதப்பயணத்தின்
இலக்கை அடைந்ததில்
குங்குமம் அவனது
புருவ மத்தியில்....

முத்தத்தின் மோட்சம்
உணர்ந்திட சந்தனம்
வண்ணமாய்
அவனது கன்னத்தில்....

எம தர்மனின்
அதிகாரமும் இரங்கிடும்
அவனுடைய
மென்மையில்....

சரித்திர மங்கையர்கள்
உயிர்த்தெழப் பார்க்கிறார்கள்
அவனது மேன்மையில்....

அவனது தூர
தரிசனத்திற்காய்
மரகத பூ ஒன்று
வேள்வியில்.....

எழுதியவர் : ஆனந்தி.ரா (6-Nov-15, 6:10 am)
பார்வை : 105

மேலே