அக்கினி நட்சத்திரம்

தொண்டன்: இன்னியிலிருந்து அக்கினி நட்சத்திரம். சூரியன் ரொம்ப உக்கிரமாக கொதிப்பான்.
தலைவர்: அப்படீன்னா நம்ம கட்சி தோழர்கள் எல்லோரையும் சுலபமாக கொதித்தெழுந்து விடச் செய்யலாம்.
***
தொண்டன்: இவ்வளவு பாடுபட்டும் எனக்கு கட்சி கொடுத்த பதவி வெறும் ' தொண்டன்'
தலைவர்: இது சாதாரண பதவி இல்லப்பா. நீ தொண்டனுக்குத் தொண்டன்.
***
தலைவர்: நம்ம கட்சி உறுப்பினர்கள் ரொம்பவே கொறஞ்சு போயிட்டாங்க.
தொண்டன்: காலைல நாம வாங்கித் தருகிற கம்பங்கூழ் குடிச்சி குடிச்சி ரொம்ப போர் அடிக்குதுன்னு பலர் கட்சியிலிருந்து விலகிவிட்டார்கள்.‌ மாலையில் அதுபோல டாஸ்மாக் சரக்கு ஒரு ரவுண்டு வாங்கி கொடுத்தோம்னா கட்சியை விட்டு லேசில் போகமாட்டாங்க.
தலைவர்: ???
***
தொண்டன்: தினமும் மூன்று வேளை பிரியாணி சாப்பிட வேண்டாம் என்று நான் சொன்னதை நீங்கள் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. இப்போ பாருங்க கட்சி வளரவில்லை உங்க தொப்பை தான் ரொம்ப அதிகமா வளர்ந்து போயிருக்கு.
தலைவர்: ???
***
தொண்டன்: ககாகிகீகுகூ கட்சியின் தலைவர் நேற்று ஒரு சிறுவர் பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடுவதை நான் வீடியோ பிடித்தேன்.
தலைவர்: ஆஹா அருமை. எதிர் கட்சி தலைவர் பொறுப்பில்லாமல் குழந்தைத் தனமாக நடந்து கொள்கிறார் என்று வத்தி வைக்க சௌகரியமாக இருக்கும்.
தொண்டன்: ???
***
தொண்டன்: நேத்து நடந்த கூட்டத்தில் உங்களுக்கு யாரோ ரகசியமாக ஒரு தக்காளி மூட்டை கொடுத்தாங்களாமே? வீட்டில் தக்காளி சாதம் செஞ்சா கூப்பிடுங்க.
தலைவர்: நீ வேறப்பா! இன்னிக்கு சாயங்காலம் நடக்கற ஒரு மீட்டிங்கில் அவங்க தலைவர் பேசும்போது அவர் மேல் வீசி எறியத்தான் அந்த தக்காளி மூட்டை.
தொண்டன்: அப்படீன்னா எனக்கு தக்காளி சாதம் கிடைக்காதா?
தலைவர்: கவலை படாதே. அந்த மூட்டையிலிருந்து பாதி தக்காளியை அபேஸ் பண்ணி வீட்டில் வச்சிருக்கேன். இன்னிக்கு நீயும் வந்து கொஞ்சம் தக்காளியை வீசியடி. நாளைக்கு உனக்கு நம்ம ஊட்டுல மத்தியானம் தக்காளி பிரியாணி கிடைக்கும்.
தொண்டன்: ???
***
தொண்டன்: என்ன தலைவரே உங்க தலை ரொம்ப கலைஞ்சி போயிருக்கு.
தலைவர்: புதுசா ஆரம்பித்த கட்சியை இன்னிக்கு கலைச்சிட்டேன்.
தொண்டன்: ???

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (5-May-24, 1:50 pm)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : akkini natchathiram
பார்வை : 29

சிறந்த நகைச்சுவைகள்

மேலே