அபார்ட்மெண்ட் புதுசு பேரு ஒரு தினுசு

1. மின்சார மயானத்திற்கு எதிரில் உள்ள அபார்ட்மெண்ட் பெயர்:
மயான சயனம்

2. முப்பது வருஷமா தண்ணீரே இல்லாத ஏரிக்கு எதிரே வந்துள்ள புத்தம் புதிய அபார்ட்மெண்ட்
பெயர்:
நீர் விழுங்கிய ஏரி

3. கடற்கரைக்கு மிக அருகாமையில் கட்டப்பட்டுள்ள புத்தம்புதிய அபார்ட்மெண்ட் பெயர்:
அலை பாயும் உள்ளம்
4. முடக்கத்தான் கீரை பயிரிடப்படும் நிலத்திற்கு எதிரே வந்துள்ள ஷோக்கான அபார்ட்மெண்ட்
பெயர்:
முடக்கத்தான் முகவரி

5. அறுபது சீனியர் சிட்டிசன்ஸ் வாழ்வதற்கு கட்டப்பட்டுள்ள அருமையான அபார்ட்மெண்ட் பெயர்:
வயது அறுபது குழந்தைகள் அறுபது

6. பேய் இருப்பதாக பேசப்படும் ஒரு வீட்டின் எதிரே வந்துள்ள புதிய அபார்ட்மெண்ட் பெயர்:
பேய் காணும் சொர்கம்

7. மாமியாரும் மருமகளும் ஒரே வீட்டில் ஆனால் தனித்தனியாக இருக்க கட்டப்பட்டுள்ள புதுமையான
அபார்ட்மென்டின் பெயர்:
நீயா நானா

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (7-May-24, 3:08 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 28

மேலே