குலோத்துங்க சோழன் கோவை - நூல் - எட்டாவது - பாங்கற் கூட்டம்

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-

தலைவன் பாங்கனைச் சார்தல்.

பாங்கன் தலைவனை யுற்றது வினாவல்

(இ-ள்) பாங்கன் தலைவனது மனமும் புயமும் வாடிய வேறுபாடு கண்டு இவ்வேறுபாடு வந்ததற்குக் காரண மென்னை யென்று கேட்டல்.

* மௌவல் வாணகையென்றும் பாடம்.

கட்டளைக் கலித்துறை

தீதோரை மாற்றித் திசைகாத்த தோசெஞ்சொ லேழிசையிற்
போதோடு பட்ட புலர்ச்சிகொ லோபொன்னி பூக(ச்)சென்னி
மீதோத மோது முறந்தைக் குலோத்துங்கன் வெற்ப(ண்)ணலே
யேதோ வறிகின்றி லேன்றிரு மேனி யிளைத்ததுவே! 43

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (5-May-24, 6:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 6

மேலே