அன்புக்காக என் இறைவா
"அன்னம் தேடி வந்தோம் இறைவா !
அனாதையாய் வந்து நின்றோம் இறைவா !
இனிமை தேடி வந்தோம் இறைவா !
இல்லம் துறந்து நின்றோம் இறைவா !
உரிமை துறந்து நின்றோம் இறைவா !
உண்மை பேச வந்தோம் இறைவா !
ஊமையாய் பேசுகின்றோம் இறைவா !
ஊனமாய் உன் வழி ஓடி வருகின்றோம் இறைவா !
எண்ணத்தில் வாழ முயன்றோம் இறைவா !
எளிமையின் ஆதாரம் நாங்கள் இறைவா !
ஏளனத்தின் ஆகாரம் நாங்கள் இறைவா !
ஏழையின் பசிக்கு உதவுவாய் இறைவா !
ஐம்பூதங்களையும் எங்களுக்குக் கொடுப்பாய் இறைவா !
ஐயந்தீர்க்க ஓடி வருவாய் இறைவா !
ஒளி கொடுக்க கண்ணாக வருவாய் இறைவா !
ஒன்றுபட்ட மனம் வேண்டி நின்றோம் இறைவா !
ஓயாமல் உன்னுள் பாய்ந்து நின்றோம் இறைவா !
ஓங்கார ரூபமாய் உயர்ந்து நின்றாய் இறைவா !"