அன்னையர் தினம்
அன்னையர் தினம்
அன்பு என்பதின் அர்த்தத்தை நான் அறிந்தது அவளாலே
ஆகாரம் பசியை தணிக்கும் என்றறிந்தது அவளாலே
இன்பம் என்பதின் உச்சம் மகிழ்வு என அறிந்தது அவளாலே
ஈன்றவளுக்கு என்றும் தன்னலமில்லை என்றறிந்தது அவளாலே
உண்மையான உயிர் பாசம் என்னென்று அறிந்தது அவளாலே
ஊக்கம் உழைப்பு சொற்களின் பொருள் அறிந்தது அவளாலே
என்னேரத்திலும் அடைக்கலம் உ ண்டென அறிந்தது அவளாலே
ஏக்கம் கொள்ளும் நேரம் நிம்மதியை நான் அறிந்தது அவளாலே
ஐயம் அடைந்த வேளை மனத் தெளிவை அறிந்தது அவளாலே
ஒன்றுக்கும் ஆசைப் படாமல் என் உயர்வையே மனதில் வைத்து
ஓசையில்லாமல் உழைக்கும் உயர்ந்த உள்ளம் உள்ளவளை
இந்நாளில் எண்ணி எண்ணி மனதில் வைத்து வணங்குவோம்