ஆண்டாள் நாச்சியார்

ஆண்டாள் நாச்சியார் கேயென்னார்

அன்பினால் அயனை அடைய முடியும் என்று
அகிலமும் அறிய செய்த ஆரணங்கு அவள்
ஆண்டாள் நாச்சியார் எனப்பெயர் கொண்டு
இயற்றிய பாசுரங்கள் மெய்யன்பின் பிரதிபலிப்பு
ஈசனை அடைய பல வழிகள் உள்ளன என்றாலும்
உண்மை அன்பினால் உன்னையே சமர்ப்பித்தால்
ஊடலின்றி அவனின் கூடல் கிடைக்கும் எனக்காட்டி
எளிய முறையில் எல்லோரும் அறியும் வகையில்
ஏட்டில் எழுதி வைத்து உயர் பொருளை அடைந்து
ஐயனுடன் கலந்து அருள் பாலிக்கும் அன்னையை
ஒருமனதாகித் தொழுது வேண்டிய வரங்களை பெற்று
ஓர் முறையேனும் அவள் பாசுரங்களை பாடி மகிழ்வோமாக

எழுதியவர் : கே என் ராம் (13-May-24, 3:25 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 31

மேலே