என்பிறப்பெண் ணத்தொலையா தே - நேரிசை வெண்பா

ஒருவிகற்ப நேரிசை வெண்பா

கன்னபுர மாலே கடவுளிலு நீயதிகம்
உன்னிலுமே யானதிக மொன்றுகேள் – முன்னமே
உன்பிறப்போ பத்தாம் முயர்சிவனுக் கொன்றுமில்லை
என்பிறப்பெண் ணத்தொலையா தே!

– கவி காளமேகம்

எழுதியவர் : கவி. காளமேகம் (16-May-24, 6:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே