குலோத்துங்க சோழன் கோவை - நூல் - எட்டாவது - பாங்கற் கூட்டம் - 45

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-

தலைவன் பாங்கனைச் சார்தல்.

பாங்கன் தலைவனை யுற்றது வினாவல்

தலைவ னுற்ற துரைத்தல்.

கற்றறி பாங்கன் கழறல்.

(இ-ள்) வேதாகமங்கள்யாவுங் கற்றறிந்த பார்ப்பனப் பாங்கன் தலைவனை யிடித்துக்கூறல். இடித்துக்கூறல் – உறுதிச்சொற் சொல்லுதல்
.
கட்டளைக் கலித்துறை

அல்லோ வெயிலைப் பொருமிரு ளோவழ லோனைமொய்க்குங்
கல்லோ குழையுங் கடலோ வுறங்குங்கல் யாணிப்பிரான்
வில்லோத மீது குனித்தோன் குலோத்துங்கன் வெற்பிலொரு
செல்லோதி யோநின் மனமயக் காநிற்குந் தேர்மன்னனே! 45

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (20-May-24, 6:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே