தமிழ் புத்தாண்டு பிறந்தது

தமிழ் புத்தாண்டு பிறந்தது

நாடு பொலிவு பெற்று எல்லோரும் நலமடைய
நன்மைகள் பெருகி நாற்புறமும் செழித்திட
சிறுமைகள் ஒழிந்து பெருமைகள் பெருகிட
செழுமைகள் ஓங்கி சிறப்புக்கள் வளர்ந்திட
சீர்குலைவுகள் மறைந்து நாமெல்லாம் முன்னேறிட
குறைகள் யாவும் நீங்கி நிறை வாழ்வு அமைந்திட
வரும் இந்த ஆண்டினை பேசி நாவால் புகழ்ந்திட
வந்த துன்பங்கள் யாவையும் இன்பமாக மாறிட
உண்மைகள் நிலைத்து உன்னதங்கள் கூடிட
உயரிய எண்ணங்கள் விரிந்து குவலயம் பயனடைய
உயிரினங்கள் யாவையும் உல்லாசம் அடைந்திட
நண்பர்கள் கூடி அமர்ந்து நன்மையைக் கொண்டாடிட
புத்தாண்டு பிறந்தது புதுப்பொலிவும் வந்ததென
மாற்றங்களைக் காண மகிழ்வுடனே வரவேற்போம்

எழுதியவர் : கே என் ராம் (3-May-24, 2:47 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 23

மேலே