காதலனை எண்ணி

------------------------------------தலைவனுக்கு தலைவி கூறும் கவிதை------------------------------------

காற்றே காற்றே நீ தூது சென்று வருவாயோ
என் கவியிடம் வாழ்த்து கேட்டு வருவாயோ
முகிலே நீ தூது சென்று வருவாயோ
என் தலைவன் சுகம் அறிந்து வருவாயோ

மதியே நீ தூது சென்று வருவாயோ
என் மணாளன் மனம் அறிந்து வருவாயோ
மழையே நீ தூது சென்று வருவாயோ
என் துணைவன் காதல் அறிந்து வருவாயோ

கெஞ்சும் நங்கையிடம் கொஞ்சும் மொழி பேசாயோ
தஞ்சம் என்று வந்தேன் பேதை நெஞ்சம் உணர மாட்டாயோ
மஞ்சம் ஏறி வந்தால் நீ மிஞ்சும் புதுமைகள் செய்யாயோ
அஞ்சும் அது மயங்கும் மாறனை விஞ்சும் வித்தைகள் புரிவாயோ // அஞ்சும் - ஐந்தும் - ஐந்து புலன்களும்
இன்பம் இன்பம் அதில் நாட்டம் நாட்டம் கொள்ளாயோ
நித்தம் நித்தம் கொஞ்சி முத்தம் முத்தம் தாராயோ!!!

எழுதியவர் : மோகன் ராஜா - மோ ரா (5-Nov-15, 11:17 pm)
Tanglish : kathalanai yenni
பார்வை : 117

மேலே