மோகன் ராஜா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மோகன் ராஜா |
இடம் | : நம்பியூர், கோபி, ஈரோடு |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 971 |
புள்ளி | : 42 |
காந்தக் காற்றிலே ஈர்கப்பெற்ற மழைத்துளிகள்
சாரல் சாரலாய் தூவி
நீலவானம் கருமேகத்தில் மறைந்து
சீற்றமிகு சூரியனை உறங்கச் செய்தனவோ
கூவிக்குழாவும் குருவிகளும் அதிகாலையை மறந்தனவோ
மாடுகளும் மயில்கூட்டங்களும்
ஆடுகளும் சேவற்கூட்டங்களும்
பொழுதுவிடிந்ததை உணர வில்லையோ
எல்லாம் மயங்கிமறந்து உறங்கிவிட
மல்லிகைமலர் விரல்நுனிகள் எழுதும் ஓர் குறுஞ்செய்தி என்னை எழுப்புகிறதே!
puthiya yukthiyai uruvakkum Arivu undu
iyaalamal thilaiporku irangi uthavum nala manam undu
uyanrtharuku mariyathi kaatum panivundu
kuzhanthaiyai maari pesum parivundu
adakkam konda perazhagi
mayakkam tharum anbu undu!
Kavithai solla varathai undu aanal aval gunathai solla mozhiyillaiye!
aval oru pesum paingili
ketkum nalthisayil aval osai
aval anthamo mukkadal sangamathil
maivizhiyal iruviyai maraithaval
kavi paada oru ithayam thanthaval, yar aval???
மல்லிகை விரல்கள் மதியின் முகம்
மின்மினிக் கண்கள் கொவ்வைச் செவ்வாய்
மயிற்பீலியென இமைகள் முத்தெனப் பற்கள்
மானென வதனம் பசுவென பொலிவு
கானகத்தின் கலையரசியோ
பாற்கடலின் இல்லத்தரசியோ
விரிந்தெழுந்த வானத்து
ஜோதியின் பிம்பமோ
சிலிர்க்கின்ற காற்றின் மென்தடவலோ
பார்க்கும் கண்களுக்கு விருந்தளிக்கும் யவ்வனப் பொன்சிலையோ
மதியோ மங்கையோ நதியோ நங்கையோ
எழுஸ்வரமோ பெண்ணினமோ பொறுமையின் பொற்கோவிலோ
காரிருளும் கலைந்தோடும் காற்றின் சுழலோ
பார் போற்றும் வேந்தனும் பறை சாற்றும் கற்புக்கரசியோ
பயில்விக்கும் ஆசானும் பணிந்தேத்தும் கலைமகளோ
நீயே ஆள்வது என் இதயமோ
தீயாய் எரிந்தது உன் பிரிவால்
மெய்யென நீ உணர்ந்தால
விடியும் வரை என்னுடன் இருக்கிறாய்
விடிந்தவுடன் மறைந்து செல்கிறாய்
கண்ணுக்குள் காதல் வார்க்கிறாய்
நெஞ்சுக்குள் ஆசை வளர்க்கிறாய்
நினைக்கிறேன் மறுகணம் தோன்றினாய்
மறக்கிறேன் போக மறுக்கிறாய்
நினைக்க மறந்தால் கனவாய் வருகிறாய்
மறக்க நினைத்தால் உயிர் வலியாய் மாறினாய் - கண்மணியே
சட்டென்று மாறுது வானம்
போர்வையாய் போர்த்துது மேகம்
சில்லென்று வீசும் காற்றில்
பனி தூறல் இன்பம் தருதே
நான் உடல் இதயம்
நீ உயிர் துடிப்பு
என் தனி வாழ்வில்
உன் துணை அழகு
நான் கொண்ட கோபம் உன் பேச்சினில் குறையும்
நான் கொண்ட மையல் உன் அழகினில் கூடும்
உன்னுடன் இருப்பதே என் மனம் எண்ணும்
உன் பிரிவென்பதோ கடும் புயல் வெள்ளம்
நீ மலர் நான் தேனீ
நீ மலர்ந்தால் நான் சுவைப்பேன்
நீ மொழி நான் கவி
நீ சிரித்தால் நான் படைப்பேன்
ஆமையின் ஓடும்
களவாடப்படும்.
கரையான் புற்றில்
பாம்பும் உலவாடும்.
***
பட்டாம்பூச்சி
சிறகில் ஓட்டையிட்டு
பாலைநிலமும் கண்
மூடி ரசிக்கப்படும்.
***
கடலுக்கும் எல்லையிட்டு
வலைபோடும் கைகளுக்கு
பரிசாய் விளங்குகள்
போடப்பட்டன.
***
கிளைகள் உடையாத
மரத்தின் வேர்கள் வெட்டப்பட்டன,
வறுமைக்கும் வருவாய் வரி
அரசினால் விதிக்கப்பட்டது.
***
முள்ளிவாய்க்கால் ஓடையில்
முள்ளாடை உடலுக்கு உடையானது.
சிரிய தேசத்தில் தீப்பந்தம்..,
பசிக்காத இரைப்பைக்குள் உணவானது.
***
செல்வன் துப்பும் உமிழும்
ஏழையின் மேல் விழுந்தது
மேகத்தின் மழைத்துளியும்
மோகத்தால் விலையானது.
***
குடிசை வீட்டு பெண்க
------------------------------------தலைவனுக்கு தலைவி கூறும் கவிதை------------------------------------
காற்றே காற்றே நீ தூது சென்று வருவாயோ
என் கவியிடம் வாழ்த்து கேட்டு வருவாயோ
முகிலே நீ தூது சென்று வருவாயோ
என் தலைவன் சுகம் அறிந்து வருவாயோ
மதியே நீ தூது சென்று வருவாயோ
என் மணாளன் மனம் அறிந்து வருவாயோ
மழையே நீ தூது சென்று வருவாயோ
என் துணைவன் காதல் அறிந்து வருவாயோ
கெஞ்சும் நங்கையிடம் கொஞ்சும் மொழி பேசாயோ
தஞ்சம் என்று வந்தேன் பேதை நெஞ்சம் உணர மாட்டாயோ
மஞ்சம் ஏறி வந்தால் நீ மிஞ்சும் புதுமைகள் செய்யாயோ
அஞ்சும் அது மயங்கும் மாறனை விஞ்சும் வித்தைகள் புரிவாயோ // அஞ்சும் - ஐந்தும்
---------------காதலனும் காதலியும் மாதுளங் கனியை ரசித்து ஒருவருக்கொருவர் அன்போடு பாடும் பாடல்-------------------------------
ஆண்: மாதுளங் கனி நீயோ
பெண்: மாது உளமறி(ந்த) கவி நீயோ
ஆண்: மாதுளை முத்துக்கள் உன் பற்கள்
பெண்: மாதுளை மொட்டுக்கள் உன் கண்கள்
ஆண்: மாதுளை கனிரசம் உன் உமிழ் நீர்
பெண்: மாதுளை ரசநிறம் உன் உதிரம் (செந்நீர்)
ஆண்: அரை மாதுளங் கனிகள் உன் கன்னம்
பெண்: இள மாது என் மனதில் உன் எண்ணம்
ஆண்: மாதுளை மலரின் வனப்பு நீ
பெண்: மாதுளை மலரை மூடிய குருத்து நீ
ஆண்: மாதுளை முளைத்த ஈரானிய ராணி நீ
பெண்: எனை பாரதம் ஏந்தி வந்த கவிஞன் நீ
பெண்: மாதுளை செடியாக நான்
பெண
நண்பர்கள் (6)

கிரி பாரதி
தாராபுரம், திருப்பூர்.

சொ பாஸ்கரன்
விளந்தை ஆண்டிமடம்

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

சந்தோஷ்
தருமபுரி

சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை
இவர் பின்தொடர்பவர்கள் (6)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை
